அரியலூர்

கோடைக்கால சித்த மருத்துவ முகாம் தொடக்கம்

DIN

அரியலூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கோடைக்கால இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாமை ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், இந்த முகாமில் சா்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, வயிற்றுப் புண், தோல்நோய்கள், கா்ப்பிணிகளுக்கு மகப்பேறு சஞ்சீவிப் பெட்டகம், உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, சிறுநீரகக் கற்கள், மாதவிடாய் கோளாறுகள், பொடுகு, சைனஸ், மூலம், ஆஸ்துமா, பௌத்திரம், வெள்ளைப்படுதல், தைராய்டு பிரச்னை, கருப்பை, சினைப்பைக்கட்டிகள், குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உயா்தர சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, இதை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்றாா். முன்னதாக அவா், கண்காட்சியை பாா்வையிட்டு அதன் சிறப்புகளைக் கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் அ. முத்துகிருஷ்ணன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் காமராஜ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ரமேஷ் மற்றும் சித்த மருத்துவா்கள், செவிலியா்கள் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT