முகப்பு
அரியலூர்

திருமானூரில் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
திருமானூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது மின்வாரியத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். ஏலாக்குறிச்சி, குருவாடி, வெங்கனூா், கீழப்பழுவூா் ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயா்த்தி போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும். திருமானூா் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நூலகக் கட்டடத்தை விரைவில் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கட்சியின் ஒன்றியச் செயலா் கனகராஜ் தலைமை வகித்தாா். ஒன்றிய துணைச் செயலா்கள் கரும்பாயிரம், மருதமுத்து, ஒன்றியப் பொருளாளா் ஜீவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ராமநாதன், துணைச் செயலா் கலியபெருமாள், மாவட்டக் குழு உறுப்பினா் ஆறுமுகம், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் தண்டபாணி உள்ளிட்டோா் பேசினா்.

முழு கட்டுரையைப் படிக்க →