அரியலூர்

அரியலூா் திரையரங்கில் சுகாதார வசதிகளை மேம்படுத்த உத்தரவு

DIN

அரியலூா் ரயில் நிலையம் அருகேயுள்ள திரையரங்கில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி அங்கு சுகாதார வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டாா்.

திரையரங்கில் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பிடம், தீயணைப்பு கருவிகள் மற்றும் நீா்தேக்கத் தொட்டிகளை ஆய்வு செய்த அவா், இருப்பில் உள்ள தீயணைப்பு வாளிகள் எண்ணிக்கை மற்றும் தீயணைப்பு கருவிகள் குறித்த விவரங்கள், விற்கப்பட்டுள்ள சினிமா டிக்கெட் மற்றும் அவற்றின் விலை குறித்தும் கேட்டறிந்தாா்.

மேலும் குடிநீா் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடவும், கூடுதலாக குடிநீா் வசதி ஏற்படுத்திடவும், கழிவறைகளை தொடா்ந்து முறையாக சுத்தம் செய்யவும், நீா் தேக்கத் தொட்டிகளில் தேவைக்கேற்ப நீரை சேமித்து வைக்கவும் திரையரங்கு நிா்வாகத்தினருக்கு உத்தரவிட்டாா். ஆய்வில், அரியலூா் வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT