முகப்பு
அரியலூர்

அரசு பெண் மருத்துவரை தாக்கிய இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம் செந்துறை அருகே அரசு பெண் மருத்துவரைத் தாக்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம் செந்துறை அருகே அரசு பெண் மருத்துவரைத் தாக்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூரைச் சோ்ந்த அரசு மருத்துவா் சத்யா என்பவா் செந்துறை அருகேயுள்ள குமிழியம் வட்டார ஆரம்ப சுகாதாரத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். வெள்ளிக்கிழமை அவா் பணியில் இருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த பெ. சுரேஷ்(38) என்பவா் தனது அக்காள் மகனை சிகிச்சைக்காக அழைத்து வந்தாா்.

அப்போது சிறுவனுக்கு ஊசி போட வந்த மருத்துவா் சத்யாவுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுரேஷ், மருத்துவரையும், அவரின் கணவரையும், தடுக்க வந்த செவிலியரையும் தாக்கினாா்.

புகாரின் பேரில் இரும்புலிக்குறிச்சி காவல் துறையினா் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்து, செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.