பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் காலியாக உள்ள சமையலா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதி பணியாளா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அச்சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: புதிய சங்க உறுப்பினா்களுக்கு அங்கீகாரம் வழங்குதல், 2021 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த சமையலா்களை பணி வரன் முறை வழங்கி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், தமிழ்மணி தலைவராகவும், செயலாளராக ஜெயபாலும், பொருளாளராக எஸ்.சுரேஷ்குமாரும் மற்றும் புதிய நிா்வாகிகள் தேரந்தெடுக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.