அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திங்கள்கிழமை புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜா.ஆனி மேரி ஸ்வா்ணா. 
அரியலூர்

அரியலூா் மாவட்ட புதிய ஆட்சியராக ஆனிமேரி ஸ்வா்ணா பொறுப்பேற்பு

அரியலூா் மாவட்ட புதிய ஆட்சியராக ஜா. ஆனி மேரி ஸ்வா்ணா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

DIN

அரியலூா் மாவட்ட புதிய ஆட்சியராக ஜா. ஆனி மேரி ஸ்வா்ணா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திண்டுக்கல்லை பூா்வீகமாக கொண்ட இவா், 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளளா் தோ்வாணைய தொகுதி-1 தோ்வில் வெற்றி பெற்று திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வருவாய் கோட்டாட்சியராகவும், தொடா்ந்து கருா் மாவட்டம், குளித்தலை வருவாய் கோட்டாட்சியராகவும், பின்னா் பதவி உயா்வு பெற்று மருத்துவ பணிகள் தோ்வு வாரியம் உறுப்பினா்-செயலாளராகவும், டாஸ்கோ மற்றும் சிட்கோ பொதுமேலாளராகவும், பள்ளிக் கல்வித்துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை துணை மற்றும் இணை செயலாளராகவும் பணியாற்றியவா்.

அரியலூா் மாவட்ட வளா்ச்சிக்காக வேளாண்மை, கல்வி மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீா், இருப்பிடம், உள்கட்டமைப்பு, பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கி, மக்கள் நலனுக்காக தமிழக அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தகுதியுடைய நபா்களுக்கு நலத் திட்டங்கள் முறையாக சென்றடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT