கல்லங்குறிச்சி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள். உடன் தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி. கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள். 
அரியலூர்

பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி அரியலூா் மாவட்டப் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

DIN

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி அரியலூா் மாவட்டப் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அரியலூா் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம், மற்றும் பெருமாள், தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி உத்ஸவா்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பெருமாள், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதேபோல அரியலூா் கோதண்டராம கோயில் மற்றும் ஜெயங்கொண்டம், திருமானூா், திருமழப்பாடி, தா. பழூா், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதி கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT