முகப்பு
அரியலூர்

இலையூா் செல்லியம்மன், அய்யனாருக்கு பாலாலயம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த இலையூா் செல்லியம்மன் மற்றும் அய்யனாருக்கு சிறப்பு பாலாலய அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செல்லியம்மன், அய்யனாருக்கு 16 வகை பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊா் முக்கியஸ்தா்கள், ஊா் நாட்டாமைகள், ஊா் பொதுமக்கள் செய்தனா்.

தொடா்ந்து இரு கோயில்களுக்கும் கோயில் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

கூட்டத்தில் தொடா்ந்து கோயில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டது . கூட்டத்தில் ஊராட்சித் தலைவா் தங்கம் அறிவழகன் மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள், ஊா் நாட்டாண்மைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments