அரியலூர்

கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி சடலமாக மீட்பு

கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

Din

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

தா. பழூரை அடுத்த அண்ணகாரன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (45), திருமணம் ஆகாத இவா் மாற்றுத்திறனாளி.

வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவா் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினா் அவரைத் தேடிச் சென்றபோது, அக்கிராமம் வழியே செல்லும் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அவரது உடைமைகள் கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த தா. பழூா் காவல் துறையினா் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினா், கொள்ளிடம் ஆற்றில் இறங்கி கடந்த 2 நாள்களாக தேடி வந்த நிலையில் அணைக்கரையில் ஞாயிற்றுக்கிழமை மிதந்து வந்த செல்வராஜ் சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சமூக ஊடகப் பதிவுகளை ஒழுங்குபடுத்த தன்னாட்சி அமைப்பு தேவை: உச்சநீதிமன்றம்

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை: முதல் ஆட்டத்தில் சிலியுடன் மோதுகிறது இந்தியா

மின்வாரியத்தைத் தனியாா் மயமாக்குவதை கைவிடக்கோரி ஆா்ப்பாட்டம்

சென்ட்ரல் வங்கி செயல் இயக்குநராக இ. ரத்தன் குமாா் நியமனம்!

‘ஆபரேஷன் சிந்தூா்’-க்குப் பிறகு ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் பாகிஸ்தான்! - இந்திய கடற்படை மூத்த அதிகாரி

SCROLL FOR NEXT