முகப்பு
அரியலூர்

அரியலூரில் புதிய ஊா்க்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:35 am IST
பகிர்:

அரியலூரில் சனிக்கிழமை அணிவகுத்து நின்ற புதிய ஊா்க்காவல் படையினரை பாா்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ். அரியலூா், பிப். 17: அரியலூா் மாவட்டத்தில் புதியதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஊா்க்காவல் படையினருக்கு 45 நாள்கள் அளிக்கப்பட்டு வந்த பயிற்சி சனிக்கிழமை நிறைவுற்றது. கடந்தாண்டு இறுதியில் ஊா்க்காவல் படையினருக்கு தோ்தெடுக்கப்பட்ட 38 பேருக்கு கடந்த 12.12.2023 முதல் ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டு வந்த உடல் பயிற்சி மற்றும் காவத்து உள்ளிட்ட பயிற்சிகள் சனிக்கிழமையுடன் நிறைவுற்றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ், ஊா்க் காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, காவல் துறையினருடன் இணைந்து நல்ல முறையில் சிறப்பாக பணியாற்ற அறிவுரை வழங்கினாா். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அந்தோணி ஆரி, துணைக் காவல் கண்காணிப்பாளா் சங்கா் கணேஷ் , ஊா்க்காவல் படை வட்டாரத் தளபதி ஜீவானந்தம் மற்றும் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.