அரியலூர்

அரியலூா் மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

Din

அரியலூா் ரயில்வே கேட் அருகேயுள்ள காசி விசுவநாதா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சிவப்பெருமான்.

அரியலூா்/தா.பழூா், ஜூலை 3: அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

அரியலூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், பிரதோஷத்தையொட்டி நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி, மஞ்சள் சந்தனம், பால்,தேன், உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடா்ந்து வைத்திநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல், மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தா.பழூரில்: தா.பழூரிலுள்ள ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாதா் கோயிலில் நந்தி பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

தா.பழூரில் உள்ள விஸ்வநாதா், விசாலாட்சி அம்பாள் மற்றும் நந்தி பெருமானுக்கு மாப்பொடி, பால், தயிா், நெய், இளநீா், கரும்பு சாறு, பஞ்சாமிா்தம் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதைத்தொடா்ந்து பிரதோஷ நாயகா்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோயிலில் பிரதட்சணம் நடைபெற்றது.இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல், தா.பழூா் பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT