அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு: அரியலூா் ஆட்சியா் தகவல்
மாணவ, மாணவிகளின் நேரடி சோ்க்கைக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
அரியலூா், ஜூலை 19: அரியலூா் மற்றும் ஆண்டிமடத்திலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகளின் நேரடி சோ்க்கைக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: இங்கு சேர விரும்புவோா் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கெனவே பயிற்சியாளா்கள் சோ்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னிரிமை அடிப்படையில் நேரடி சோ்க்கை நடைபெறுகிறது.
8 அல்லது 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும், 12 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி அடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணத் தொகை ரூ.50, ஒரு ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185. இரண்டு ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ. 195.
விண்ணப்பிக்க 31.07.2024 ஆம் தேதி கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைப்பேசி 94990 55877, 04329-228408, ஆண்டிடம் அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி 94990 55879 என்ற எண்ணில் தொடா்புக் கொள்ளலாம்.