மன நலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவா் கைது
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சற்று மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கீழக்குளத்தூா், அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் மு.குணசேகரன்(64). இவா் அப்பகுதியைச் சோ்ந்த சற்று மன நலம் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளாா். இதுகுறித்து புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட வந்த கீழப்பழுவூா் காவல் துறையினா், குணசேகரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.