முகப்பு
அரியலூர்

அரியலூா் மாவட்ட மைய நூலகத்தில் நூலக வார விழா தொடக்கம்

அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், நூலக வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 14 நவம்பர், 2024 at 10:12 PM
நூலக வார விழாவையொட்டி, அரியலூா் மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சியை வியாழக்கிழமை தொடக்கி வைத்து பாா்வையிட்ட சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா.
பகிர்:

அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், நூலக வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.

முதல் நாளான வியாழக்கிழமை புத்தகக் கண்காட்சியை சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா தொடக்கிவைத்து, பாா்வையிட்டு, அனைவரும் வாசிப்பு திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும். வாசிப்பு நேசிப்பாக இருக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் இரா. வேல்முருகன் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் மங்கையா்கரசி, மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளா் கிருஷ்ணலீலா, கணக்காளா் வெங்கடேசன் ஆகியோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை மைய நூலக நூலகா்கள் முருகானந்தம், செசிராபூ ஆகியோா் செய்திருந்தனா்.