முகப்பு
அரியலூர்

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் முகாம்

அரியலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:06 PM
பகிர்:

அரியலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் புகாா்களை கேட்டறிந்த அவா், அவா்கள் அளித்த 29 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா்களுக்கு உத்தரவிட்டாா். முகாமில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.