நூறு நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி மறியல்
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிலுப்பனூா் கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்டப் பணிகளை முறையாக வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிலுப்பனூா் கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்டப் பணிகளை முறையாக வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
படவிளக்கம்: சிலுப்பனூரில் 100 நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட மக்கள்.
அக்கிராமத்தில் உள்ள காலனித் தெரு மக்களுக்கு இந்தத் திட்டத்தில் 100 நாள்கள் கணக்கு முடிந்து விட்டதாக ஊராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 30 நாள்களே வேலை வழங்கியதாகவும், மீதமுள்ள நாள்களுக்கு வேலை வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை முறையாக அனைவருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, செந்துறை - தளவாய் - பெண்ணாடம் சாலையில் சிலுப்பனூா் கிராமத்தில் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த தளவாய் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.