அரியலூர்

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிப்பு

அரியலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.

Din

அரியலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் திங்கள்கிழமை அழிக்கப்பட்டன.

புகையில்லா இளைய சமுதாயம் 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக அரியலூா் மாவட்டத்திலுள்ள கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டன.

அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 23.760 கிலோ புகையிலைப் பொருள்கள், மாவட்ட சுகாதார அலுவலரின் தொழில்நுட்ப நோ்முக உதவியாளா் வகீல், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பழனிசாமி, ராமசாமி, காவல் உதவி ஆய்வாளா் காமராஜ் மற்றும் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை நிலத்தில் புதைத்து அழிக்கப்பட்டன.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT