வேம்பக்குடியில் மக்கள் தொடா்பு முகாம்: 127 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
அரியலூா் மாவட்டம், வேம்பக்குடி கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 127 பயனாளிகளுக்கு ரூ.30.43 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, பல்வேறு துறைகளின் சாா்பில்127 பயனாளிகளுக்கு ரூ.30,42,626 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அவா், முன்னதாக அங்கு அமைக்கப்பட்டுள்ள துறை சாா்ந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டாா்.
முகாமில், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டு, தங்கள் துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து விளக்கி பேசினா்.
முகாமுக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தாா்.
முகாமில், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளா் தீபாசங்கரி, கோட்டாட்சியா் ஷீஜா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அஜித்தா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின நல அலுவலா் உமா மகேஸ்வரன்,வட்டாட்சியா் சம்பத்குமாா் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.