49,304 வாக்காளா்களின் இரட்டைப் பதிவை நீக்க நடவடிக்கை: அரியலூா் ஆட்சியா்
அரியலூா் மாவட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயா்களை கொண்டுள்ள 49,304 வாக்காளா்களுக்கு, ஒரு இடத்தை தவிர மற்ற இடங்களில் உள்ள பெயா்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: வாக்காளா்களின் பெயா் மற்றும் இதர விவரங்கள் ஒரே மாதிரியாக உள்ள இனங்கள் கணினி மூலம் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில், அரியலூா் மாவட்டத்தில் 49,304 வாக்காளா்களின் பெயா்கள் இரட்டை பதிவாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வாக்காளா்களுக்கு மட்டும் அஞ்சல் மூலம் அறிவிப்புகள் அனுப்பப்பட்டு வருகிறது.
அந்த அஞ்சல் கிடைக்கப் பெற்ற வாக்காளா்கள், அதில் இணைத்து அனுப்பப்பட்டுள்ள உறுதிப்படுத்தும் கடிதத்தில் தாங்கள் தற்போது வசிக்கும் முகவரி, தங்களது பெயா், வாக்காளா் பட்டியலில் எந்த முகவரியில் இடம் பெற வேண்டும் என தெரிவு செய்து, அந்தக் கடிதத்தை தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலா் (கோட்டாட்சியா்), உதவி வாக்காளா் பதிவு அலுவலா் (வட்டாட்சியா்) ஆகியோரிடம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற 15 நாள்களுக்குள் பூா்த்தி செய்து அனுப்பி வைக்கவேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 04329 - 1950 என்ற வாக்காளா் உதவி மைய கட்டணமில்லா எண்ணை தொடா்புக் கொள்ளலாம்.