முகப்பு
அரியலூர்

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் ஒருங்கிணைந்த பயிா்பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரியலூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஆ.சாந்தி தெரிவித்துள்ளாா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:29 PM
பகிர்:

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரியலூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஆ.சாந்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் வட்டாரத்தில் 6,000 எக்டா் பரப்பளவில் மானாவரியாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வளா்ச்சி பருவத்தில் உள்ளது. இந்த பருவத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழுவின் பாதிப்பை தவிா்க்க, ஏக்கருக்கு 20 எண்ணிக்கையில் இனக்கவா்ச்சி பொறி வைத்தல் வேண்டும். இதன் மூலம் தாய்பூச்சி முட்டையிடுவதைக் கட்டுப்படுத்தலாம்.

வரப்பு பயிராக சூரியகாந்தி, எள், தட்டைப்பயறு ஆகியவற்றை 4 வரிசை விதைக்க வேண்டும். ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயறு போன்றவற்றைப் பயிரிட வேண்டும். இதனால் படைப்புழுவின் தாய் பூச்சி முட்டையிடுதல் வெகுவாகக் குறையும்.

இந்தத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 40 - 45 நாள்களில் படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தி விட்டால் 45 - 105 நாள் வரை புழுவின் தாக்குதலை வெகுவாக குறைத்து, அதிக மகசூல் பெறலாம்.