ஆண்டிமடம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத ரூ.23 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத ரூ.23 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வாளா் கவிதா, உதவி ஆய்வாளா்கள் பவுன்ராஜ் ரவி, இளையபெருமாள் மற்றும் காவலா்கள் ஆகியோா் கொண்ட குழுவினா், ஆண்டிமடம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரையில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மணிவண்ணன் என்பவா், பத்திர பதிவுக்காக வந்தவா்களிடம் வசூலித்து வைத்திருந்த ரூ. 23 ஆயிரத்தை சாா்- பதிவாளா் சண்முகத்திடம் கொடுக்கும்போது, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அதனை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.