சிறுமி கா்ப்பம் இளைஞா் கைது
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மீன்சுருட்டி, புதுத்தெருவைச் சோ்ந்த தவமணி மகன் தனுஷ்(19). இவா், காதலித்து வந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதனால் கா்ப்பமான அச்சிறுமி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த மீன்சுருட்டி காவல் துறையினா், தனுஷை புதன்கிழமை கைது செய்தனா்.