முகப்பு
அரியலூர்

தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளா்கள் 4-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தில், தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 9:43 PM
பகிர்:

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தில், தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை இருப்பு குறைவு, அதிகம் மற்றும் போலி பில் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை, தற்போது இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி பொருள்களை விற்பனை செய்ய அதிகாரிகள் வலியுறுத்தக் கூடாது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டத்திலுள்ள 65 தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றி வரும் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து ஊழியா் சங்கத்தினா் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்தனா்.