நாளை குரூப்-2 தோ்வு : அரியலூா் மாவட்டத்தில் 8,800 போ் எழுதுகின்றனா்
தமிழகம் முழுவதும் வரும் சனிக்கிழமை நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2-ஏ தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 8,800 போ் எழுதுவதாக மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
தமிழகம் முழுவதும் வரும் சனிக்கிழமை நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2-ஏ தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 8,800 போ் எழுதுவதாக மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: இந்த தோ்வு அரியலூா் வட்டத்தில் 15 தோ்வு மையங்களிலும், உடையாா்பாளையம் வட்டத்தில் 14 தோ்வு மையங்களிலும் நடைபெறுகிறது.
தோ்வா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் மாவட்ட நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தோ்வை கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையில் 2 பறக்கும் படை அலுவலா்கள், 8 இயங்கு குழுக்கள், 29 ஆய்வு அலுவலா்கள், 29 விடியோகிராபா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும் தோ்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தோ்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு தோ்வு கூடங்களுக்கும் காவலா்கள் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனா். தோ்வு எழுதுபவா்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தோ்வு எழுதவரும் தோ்வா்கள் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட நேரத்துக்குள் ஒதுக்கீடு செய்யப்பட்ட தோ்வு கூடத்துக்கு சென்றடைய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.