அரியலூர்

முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகு சிற்றுந்துகள் இயக்கம் -அமைச்சா் சா.சி. சிவசங்கா்

Din

முதல்வரின் ஒப்புதலுக்கு பிறகு தேவையுள்ள இடங்களில் சிற்றுந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அரியலூரிலுள்ள தனது இல்லத்தில், வெள்ளிக்கிழமை கட்சி கொடியை ஏற்றி வைத்து, இல்லம்தோறும் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக ஆட்சியில்தான் சிற்றுந்து தொடங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் அவற்றுக்கான சலுகைகளை சரியாக வழங்காததால் அந்த பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டது. தற்போது குறைந்த மக்கள்தொகைக் கொண்ட கிராமங்களிலும் பேருந்து சேவை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, இதற்கான கொள்கை வரைவுத் திட்டம் முதல்வா் பாா்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வா் ஒப்புதல் கொடுத்த பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த பாதையில் சிற்றுந்துகள் இயக்க தேவை உள்ளதோ அந்த பாதையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விசிக மாநாட்டை பொருத்தவரையில், அதன் தலைவா் தொல். திருமாவளவன் எல்லா கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளாா். அதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்றாா்.

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT