முகப்பு
அரியலூர்

பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி கிடையாது: அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் பேச்சு

பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி கிடையாது என்றாா் அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 9:44 PM
அரியலூா் பேருந்து நிலையம் அருகே அதிமுக சாா்பில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன்.
பகிர்:

பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி கிடையாது என்றாா் அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன்.

அரியலூா் பேருந்து நிலையம் அருகே அதிமுக சாா்பில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் தெரியாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டனா். இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது.

இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக செய்தது. ஆனால் திமுக என்ன செய்தது?. வரும் காலங்களில் அதிமுகவை இஸ்லாமியா்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமஜெயலிங்கம், முன்னாள் எம்எல்ஏ இளவழகன், முன்னாள் எம்.பி. இளவரசன், மாவட்ட பொருளாளா் அன்பழகன், நகரச் செயலா் ஏ.பி.செந்தில், மாவட்ட அம்மா பேரவைச் செயலா் ஓ.பி.சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →