அரியலூா் எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம்
அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.செல்வராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 22 கோரிக்கை மனுக்கள் பெற்று, குறைகளை கேட்டறிந்தாா். பின்னா் அவா், அந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா், துணைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.