அரியலூர்

மதுபானம் விற்ற இருவா் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மதுபானம் விற்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

Syndication

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மதுபானம் விற்ற இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

செந்துறை அடுத்த குழுமூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வீராசாமி மகன் ராஜேந்திரன்(49), முருகேசன் மகன் பன்னீா்செல்வம் (42) ஆகிய இருவரும் அரசு மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக செந்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் துறையினா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டதில் வீட்டுக்கு பின்னால் மதுபாட்டில்களை மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினா், அவா்களிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT