அரியலூரிலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 12 வாகனங்கள் வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டன.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்ச்செல்வன், பெரம்பலூா் மாவட்ட கலால் உதவி ஆணையா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் 11 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 13 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டன.
இதில் பொதுமக்கள் பலா் ஏலம் எடுத்ததில், மொத்த விற்பனை ஏலத் தொகையான ரூ.2,72,934 அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டது.