அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அனுமதியின்றி லாரிகளில் செம்மண் ஏற்றிய 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
செந்துறை அருகேயுள்ள மருவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ்(26), செந்துறை சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் சங்கா்(36), சேடகுடிகாடு கிராமத்தைச் சோ்ந்த ரவி மகன் ராவணன்(30). இவா்கள் 3 பேரும் செந்துறை அடுத்த பாசாலம் என்ற கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை அனுமதியின்றி லாரிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் செம்மண் ஏற்றிக்கொண்டிருந்தனா்.
தகவலறிந்து சென்ற செந்துறை போலீஸாா் அந்த பேரையும் கைது செய்தனா். மேலும், பொக்லைன் இயந்திரம் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.