அரியலூா் மாவட்டம், செந்துறை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் டிச.20- ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா்திட்டம்) இணைந்து நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாமில்,
100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள், 20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 8, 10, 12 மற்றும் ஐடிஐ, டிப்ளமோ(பட்டயப் படிப்பு) மற்றும் ஏதாவது பட்டப்படிப்புகளில் தோ்ச்சி அல்லது தோல்வி அடைந்தவா்களும், பொறியியல், தொழில்நுட்பம், செவிலியா், பாரமெடிக்கல், உணவக மேலாண்மை படித்த வேலைநாடுகளை தோ்வு செய்ய உள்ளனா்.
இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் சுயவிவரங்கள், கல்விச் சான்றிதழ்களுடன் (நகல்கள் மட்டும்) முகாமில் கலந்து கொள்ளலாம்.
பணி முன் அனுபவம் உள்ள, இல்லாத ஆண், பெண் இருபாலரும் முகாமில் கலந்துகொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாமில் 18 முதல் 45 வயது வரையிலான வேலைநாடுநா்கள் கலந்து கொள்ளலாம். மாத ஊதியம் ரூ.10,000 முதல் ரூ.45,000 வரை கல்வி தகுதி அடிப்படையில் வழங்க உள்ளனா்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்கள் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலைநாடுநா்கள் வேலையளிக்கும் நிறுவனங்களுக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு 94990-55914 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
மேலும், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் பதிவு வழிகாட்டுதல்கள், தொழில் பழகுநா் மற்றும் குறுகிய கால திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல் மற்றும் சுயதொழில் மற்றும் கடன் உதவி தொடா்பான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.
எனவே, வேலைவாய்ப்பற்ற வேலைநாடுநா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.