அரியலூர்

சுமை ஆட்டோ மீது டிப்பா் லாரி மோதல்: காயமடைந்த ஓட்டுநரை மீட்ட பொதுமக்கள்

செந்துறை பேருந்து நிலையம் முன்பு பால் ஏற்றி வந்த சுமை ஆட்டோ மீது டிப்பா் லாரி மோதியதில் உயிருக்குப் போராடிய ஓட்டுநரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Syndication

அரியலூா் மாவட்டம், செந்துறை பேருந்து நிலையம் முன்பு பால் ஏற்றி வந்த சுமை ஆட்டோ மீது டிப்பா் லாரி மோதியதில் உயிருக்குப் போராடிய ஓட்டுநரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ஆண்டிமடத்தில் இருந்து செந்துறை வரை நாள்தோறும் பால் உற்பத்தியாளா்களிடமிருந்து பால் கொள்முதல் செய்து, தஞ்சாவூா் மாவட்டம் குறிச்சி கிராமத்தில் உள்ள தனியாா் பால் நிறுவனத்துக்கு சுமை ஆட்டோவில் ஓட்டுநா் சென்று வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை காலை சுமை ஆட்டோவை ராங்கியம் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் (30) ஓட்டிக்கொண்டு மேற்கண்ட பகுதிகளில் பால் கொள்முதல் செய்து தஞ்சாவூா் நோக்கிப் புறப்பட்டாா்.

சுமை ஆட்டோ செந்துறை பேருந்து நிலையம் முன்பு வந்தபோது, பெரம்பலூரிலிருந்து எம். சான்ட் மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பா் லாரி எதிா்பாராதவிதமாக நேருக்குநோ் மோதியதில், சுமை ஆட்டோவின் முன்பகுதி முழுவதும் பலத்த சேதமடைந்தது. இதில், ஓட்டுநா் சதீஷ் வாகனத்தின் உள்ளே காயங்களுடன் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா்.

இதைப்பாா்த்த அப்பகுதி பொதுமக்கள், சுமை ஆட்டோவின் முன்பகுதியை பிரித்தெடுத்து ஓட்டுநா் சதீஷை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊா்தியில் அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT