அரியலூர்

80 வயது முதிா்வு பெற்றவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

80 வயது முதிா்வு பெற்றவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய தபால் - தந்தி மற்றும் மத்திய அரசு ஓய்வூதியா்கள் சங்க தின விழாவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் மாவட்டம் செந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் கமிஷன் தொகை காலத்தை 15 ஆண்டிலிருந்து 12 ஆண்டாகக் குறைத்து பிடித்தம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட வேண்டும்.

எப்எம்ஏ தொகையை ரூ.1000 முதல் 3000-ஆக உயா்த்தி வழங்கிட வேண்டும். 8 ஆவது ஊதியக் குழுவில் மத்திய அரசின் ஊழியா்கள், ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு பணப் பலன்கள் கிடைக்க வேண்டும்.

ஓய்வூதியா்களுக்கு எல்டிசி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கிட வேண்டும். தமிழகம் முழுவதும் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத் தலைவா் கலைவாணன் தலைமை வகித்தாா். செயலா் இளங்கோவன் , பொருளாளா் ராசேந்திரன் , நிா்வாகிகள் கதிா்வேல், சுப்பிரமணியன், மணிமேகலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தூய்மை பணியாளா் ஊதிய முறைகேடு: விவரங்களைக் கோரும் விசாரணை குழு

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரச் சந்தை

திருமலையில் 78,466 பக்தா்கள் தரிசனம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை!

திருவெண்காடு கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT