கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக அரியலூா் ரயில் நிலையம் வழியாகச் சென்ற ரயில்களில் தமிழகக் காவல் துறையினா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி உத்தரவின்பேரில், மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையிலான காவல் துறையினா், சனிக்கிழமை அரியலூா் வந்தடைந்த ரயில்களில், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஏறி சோதனையில் ஈடுபட்டனா். இதில் குருவாயூா் ரயிலில் பயணித்த பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனைக்குள்படுத்தினா்.
பண்டிகை காலங்களில் கஞ்சா கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களை தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.