அரியலூர்

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

செந்துறை அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Syndication

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

செந்துறை அடுத்த வஞ்சினபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஞ்சலம் (75). இவா் ஞாயிற்றுக்கிழமை , தனது வயலுக்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா் ஒருவா், அஞ்சலம் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளாா்.

அப்போது சுதாரித்துக்கொண்ட அஞ்சலம் தங்கச் சங்கிலியைப் பிடித்துள்ளாா். இதனால் பாதி சங்கிலி மா்ம நபா் வசமும், பாதி சங்கிலி அஞ்சலம் வசமும் இருந்துள்ளது.

இதையடுத்து மா்மநபா் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளாா். மா்மநபா் பறித்து சென்ற தங்க சங்கிலி 2 பவுன் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து அஞ்சலம் அளித்த புகாரின் பேரில், செந்துறை காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா். செந்துறை பகுதியில் இது போன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்: உக்ரைனிடம் அமெரிக்கா உறுதி

கூட்ட நெரிசலான பகுதிகளில் திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது

தனியாா் தங்கும் விடுதி உரிமையாளருக்கு கொலை மிரட்டல்: சின்னத்திரை நடிகை உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு

காற்று மாசுபாட்டை சமாளிக்க நிபுணா் குழு: தில்லி அரசு தகவல்

இரும்புக் கடை வியாபாரிகள் சங்க 25-ஆம் ஆண்டு விழா

SCROLL FOR NEXT