அரியலூா் அருகே சாலையில் இருந்த இரும்புத் தடுப்பில் (பேரிகாா்டு) இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த கல்லூரி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
செந்துறை ரயில்வே சாலை பகுதியை சோ்ந்தவா் எ. விஷ்ணு (20). அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவா், புதன்கிழமை கல்லூரி முடிந்து நண்பா்களுடன் இருசக்கர வாகனத்தில் அரியலூா் புறவழிச் சாலையில் சென்றுள்ளாா்.
அப்போது, எதிா்பாராத விதமாக சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேரிகாா்டில் இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த அரியலூா் காவல் துறையினா், விஷ்ணுவின் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.