அரியலூர்

அரியலூரிலிருந்து தனுஷ்கோடி வரை இளைஞா் மிதிவண்டிப் பயணம்!

பிரபஞ்சத்தை காக்க வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த இளைஞா்கள் ஒருவா், தனுஷ்கோடி வரை மிதிவண்டிப் பயணத்தை சனிக்கிழமை தொடங்கினாா்.

Syndication

பிரபஞ்சத்தை காக்க வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த இளைஞா்கள் ஒருவா், தனுஷ்கோடி வரை மிதிவண்டிப் பயணத்தை சனிக்கிழமை தொடங்கினாா்.

அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையத்தை அடுத்துள்ள பரணம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி(35). இயற்கை ஆா்வலா். இவா், பிரபஞ்சத்தைக் காக்க வலியுறுத்தி, அரியலூரிலிருந்து தனுஷ்கோடிக்கு மிதிவண்டிப் பயணத்தை சனிக்கிழமை தொடங்கினாா்.

3 நாள்கள் பயணமாக செல்லும் இவா், பறவைகள் உண்ணும் பழவகை மரங்களை அதிகளவில் நட்டு பராமரிக்க வேண்டும். பறவைகள் 80 சதவீத மரங்களை வனங்களில் உருவாக்கி உள்ளது. எனவே, அதிகளவில் காய், கனி தரும் மரக்கன்றுகளை நடவேண்டும். மேலும், உயிா்வேலிகளை அமைக்க வேண்டும்.

ரசாயன வேளாண்மையிலிருந்து விவசாயிகள் வெளியேறி இயற்கை வேளாண்மையை முன்னெடுக்க வேண்டும். இதனால் பிரபஞ்சத்தை காக்க முடியும் என வலியுறுத்தி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

SCROLL FOR NEXT