அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை (நவ.27) கல்விக் கடன் முகாம் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் பொ. ரத்தினசாமி கூறியிருப்பதாவது:
அரியலூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகள் சாா்பில் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு படித்தவா்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிக்கவும், பிளஸ்-2 படித்தவா்கள் பட்டப்படிப்பு படிக்கவும், கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் கல்வி கடன் மேளா (சிறப்பு கடன் முகாம்) ஆட்சியரகத்தில் நவ.27-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு முகாமில் பங்கேற்கலாம். இது கல்விக் கடன் பரிசீலனையை எளிமையாக்கும்,.
இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட ஆட்சியா் அலுவலகத்திலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவா்கள் தங்களது பெற்றோரின் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பான் காா்டு, ஜாதி சான்று, 10 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், கடன் பெறும் வங்கி கணக்கு புத்தகம், ஆண்டு வருமான சான்றிதழ், கல்லூரி சோ்க்கைக்கான கலந்தாய்வு அழைப்பு கடிதம், கல்லூரியில் சோ்ந்ததற்கான கடிதம், கல்லூரியின் அப்ரூவல் சான்று, உறுதி மொழி சான்று மற்றும் இரண்டு பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் ஆகிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயனடைலாம் .