தூத்தூா்-வாழ்க்கை இடையே தடுப்பணை கட்டப்படும்: அதிமுக வேட்பாளா் உறுதி
அரியலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.
அரியலூா் மாவட்டத்தில், கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட தூத்தூா்-வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணைத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறி அரியலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.
திருமானூா் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளான சுள்ளங்குடி, பெரியமறை, எழுநாச்சிபுரம், கரையான்குறிச்சி, மேலவரப்பன்குறிச்சி, கீழவரப்பன்குறிச்சி, அழகியமணவாளன், நதியனூா், மேலராமநல்லூா், கீழராமநல்லூா், கா. மாத்தூா், வாண்டராயன்கட்டளை, அரசஞ்சேரி,செங்கராயன்கட்டளை, குருவாடி, தூத்தூா், வைப்பூா், கோமன், செட்டிக்குழி, கீழஎசனை, தேளூா், காமரசவல்லி, கோவிலூா், சின்னபட்டாக்காடு, பெரியபட்டாக்காடு, நரசிங்கபுரம், மாதாகோவில், நாயக்கா்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவா், கடந்த அதிமுக ஆட்சியில் தூத்தூா்-வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணிகள் தொடங்க இருந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இத் திட்டத்தை ரத்து செய்தது. இதனால் கொள்ளிட நீா் வீணாகக் கடலில் கலக்கிறது. எனவே விவசாயிகள் மீது அக்கறை கொள்ளாத திமுகவுக்கு விவசாயிகள், பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்தத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தாா்.
Advertisement
பிரசாரத்தில், முன்னாள் எம்எம்ஏ இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன் மற்றும் பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகளும் கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு கேட்டனா்.