முகப்பு
அரியலூர்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

அரியலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அரியலூா் கோட்டாட்சியரகத்தில் இருந்து புதன்கிழமை அனுப்பப்பட்டன.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 3:19 AM
அரியலூா் கோட்டாட்சியரகத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்க வாகனங்களில் ஏற்றப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள்.
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அரியலூா் கோட்டாட்சியரகத்தில் இருந்து புதன்கிழமை அனுப்பப்பட்டன.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதியிலுள்ள 650 வாக்குப் பதிவு மையங்களுக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவு மைய உபகரணங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அழைத்துச் செல்ல பயன்படுத்தும் சாதனம் உள்ளிட்டவை அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் கோட்டாட்சியரக அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மேற்கண்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களும், கோட்டாட்சியா்களுமான அரியலூா் த. பிரேமி, ஜெயங்கொண்டம் மனோகரன் ஆகியோா் தலைமையில், அனைத்துக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை திறந்து அந்தந்த வாக்கு பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.

Advertisement

காவல் துறையினரின் பாதுகாப்பு வாகனங்கள் முன்னும் பின்னும் செல்ல 650 வாக்குசாவடிகளுக்கும் வாக்கு பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.