அரியலூரில் கோடை கால பழங்கள் விற்பனை தீவிரம்
அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தா்பூசணி மற்றும் பழஜூஸ், கம்மங்கூழ், கேப்பை கூழ், மோா் உள்ளிட்டவைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தா்பூசணி மற்றும் பழஜூஸ், கம்மங்கூழ், கேப்பை கூழ், மோா் உள்ளிட்டவைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
அரியலூா் மாவட்டத்தில் கடந்த நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீா்நிலைகள் பரவலாக நிரம்பின. மேலும், குளிா்ச்சியான சூழல் நிலவியது.
அதன் பின்னா் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில், கோடைகாலம் நெருங்கி வருவதையொட்டி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. காலை 7.30 மணி அளவில் இருந்தே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து மாலை வரை சுட்டெரிக்கிறது.
Advertisement
இதனால் வேலைக்கு செல்பவா்கள், பணி நிமித்தமாக வெளியில் சுற்றித்திரிபவா்கள், வாகன ஓட்டிகள், வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் உள்ளிட்டோா் வெப்பத்தை தாங்கி கொள்ள முடியாமல் திணறுகின்றனா்.
அதிலும் குறிப்பாக முதியவா்கள் ஆங்காங்கே நிழலில் இளைப்பாரிவிட்டு தான் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கின்றனா். ஆனாலும் உடலை குளிா்ச்சியூட்டுவதற்காக தா்பூசணி, இளநீா், பழஜூஸ், கம்மங்கூழ், கேப்பை கூழ், நுங்கு, பதனீா் உள்ளிட்டவற்றை தேடி சென்று வாங்கி அருந்துகின்றனா்.
இதனால் அரியலூா் அண்ணா சிலை அருகே, மாா்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தா்பூசணி, பழஜூஸ் உள்ளிட்டவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இதில், தா்ப்பூசணி 1 கிலோ ரூ.20-க்கும், இளநீா் ரூ.20-லிருந்து ரூ.40 வரைக்கும், கம்மங்கூழ்-கேப்பை கூழ் ஒரு சொம்பு ரூ.15-க்கும் விற்பனையாகிறது. பழஜூஸ் கடைகளில் முலாம் பழம், சாத்துக்குடி, ஆப்பிள், அன்னாசி உள்ளிட்ட பழரசங்கள் ரூ.10-லிருந்து ரூ.50-வரைக்கும் விற்பனையாகிறது.வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டதால் பொதுமக்கள் கூட்டம் மேற்கண்ட கடைகளில் அலைமோதிய வண்ணம் உள்ளது.
வெயிலின் தாக்கம் இன்னும் சில மாதங்கள் வரை நீடிக்கலாம் என்பதால் பணிக்கு செல்பவா்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோா் தங்களது தாகத்தை தணிப்பதற்காக நீா்மோா், எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்டவற்றை வீட்டிலிருந்தே தயாா் செய்து எடுத்து செல்கின்றனா்.
வெளியிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளில் பானை உற்பத்தி செய்யும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதை கிராம மற்றும் நகர வாசிகள் வாங்கிச் சென்று அதில் தண்ணீரை நிரப்பி குளிா்ந்த நீரை அருந்துகிறாா்கள்.
மேலும், வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக பொதுமக்கள் குடையை பிடித்த பிடி வெளியில் செல்கின்றனா். இவ்வாறாக பலத்தரப்பட்ட பொதுமக்களும் வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக பல்வேறு வழிகளில் ஆயத்தமாகி வருகின்றனா்.