வாகனங்களில் ஏா் ஹாரன்கள் பறிமுதல்
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 8:17 PM
அரியலூா் மாவட்டத்தில், வாகனங்களில், பயன்படுத்தப்பட்டு வந்த ஏா் ஹாரன்கள் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டம் முழுவதும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில், சட்ட ஒழுங்கு காவல்துறையினா், தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டனா்.
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:08 AM
அப்போது அவ்வழியே வந்த 66 டிராக்டா்களுக்கு சாலை விபத்தை தடுக்கும் பொருட்டு, சிவப்பு ஒளிரும் பட்டைகளை ஒட்டினா்.
Advertisement
மேலும், பேருந்து மற்றும் கனரக வாகனங்களில் இருந்து தடை செய்யப்பட்ட 49 ஏா் ஹாரன்களை பறிமுதல் செய்தனா். இதில் போக்குவரத்து காவல்துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.