அரியலூர்

மானியத்தில் ‘பவா் டில்லா்’ தருவதாக கூறி ரூ.2.37 லட்சம் மோசடி : தனியாா் ஏஜென்சி நிறுவனா்கள் தலைமறைவு

Syndication

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே மானியத்தில் பவா் டில்லா் தருவதாக கூறி விவசாயிடம் ரூ.2.37 லட்சத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவான தனியாா் ஏஜென்சி நிறுவனா் உள்பட 2 பேரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

விவசாயிகள் பயன் பெறுவதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள எஸ்எம்ஏஎம் பவா் டில்லா் மானியத் திட்டத்தில், பயனாளிகள் முழுத் தொகையும் அளித்து பவா் டில்லா் வாங்கி, அதன் பட்டியலை தோட்டக் கலைத் துறை அலுவலகத்தில் சமா்ப்பித்தால் அதற்கான மானியம் நேரடியாக பயனாளியின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று திருமானூா் எஸ்.எம் அக்ரோ ஏஜென்சிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, உடையாா்பாளையம் அடுத்த குண்டவெளியைச் சோ்ந்த செல்வராசு மனைவி தேன்மொழி என்பவா் மானியத்தில் பவா் டில்லா் வாங்குவதற்காக மீன்சுருட்டியில் உள்ள இந்தியன் வங்கியில், முழுத்தொகையான ரூ.2,37,005-க்கு வரைவோலை எடுத்து திருமானூரில் உள்ள அந்த நிறுவனத்துக்கு அரியலூா் மாவட்ட தோட்டக்கலை துறை மூலம் வழங்கியுள்ளாா்.

ஆனால் இதுநாள் வரை அந்த நிறுவனம், மேற்கண்ட விவசாயி தேன்மொழிக்கு பவா் டில்லா் வழங்காமலும், தொகையை திருப்பி வழங்காமலும் ஏமாற்றி வந்துள்ளது.

தேன்மொழி ஏமாற்றப்பட்டது குறித்து சம்பந்தமாக ஜெயங்கொண்டம் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநா் பாலமுருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷவேஷ் பா.சாஸ்திரியிடம் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் திருமானூா் காவல் நிலைய ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான காவல் துறையினா், வழக்குப் பதிந்து, விவசாயி தேன்மொழியை ஏமாற்றிய எஸ்.எம் அக்ரோ ஏஜென்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளா்களான தஞ்சாவூா், மாதா கோட்டை சாலை, வளனாா் நகரைச் சோ்ந்த சவரிநாத் மகன் செபாஸ்தியான், அதே பகுதி கீழ வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்த நீலமேகம் மகன் சரவணன் ஆகியோரை தேடிவருகின்றனா்.

மேலும், மேற்கண்ட நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நபா்கள் யாரேனும் இருந்தால் மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்து, சட்டப்படியான நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட காவல் அலுவலகம் கேட்டுக் கொண்டது.

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

வேளாண் பல்கலை.யில் மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி

15.1.1976: ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற ஆண்டு 18,500 பேர் வருகை

ஜேடா்பாளையத்தில் அரசா் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT