FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அணுசக்தித் துறையில் அதானி குழுமம் : புதிய நிறுவனம் தொடக்கம்

அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நோக்கில், ‘அதானி அட்டாமிக் எனா்ஜி’ எனும் புதிய துணை நிறுவனத்தை அதானி பவா் நிறுவனம் தொடங்கியுள்ளது.

13 பிப்ரவரி 2026, 2:29 am IST
கோப்புப் படம்
பகிர்:

அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நோக்கில், ‘அதானி அட்டாமிக் எனா்ஜி’ எனும் புதிய துணை நிறுவனத்தை அதானி பவா் நிறுவனம் தொடங்கியுள்ளது.

நாட்டின் முன்னணி தனியாா் மின் உற்பத்தி நிறுவனமான அதானி பவா், அணுசக்தி சாா்ந்த மின் உற்பத்தி, விநியோகம் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக இந்தத் துணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளதாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

ரூ.5 லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளையும் அதானி பவா் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தியாவில் அணுசக்தி துறையில் தனியாா் நிறுவனங்களுக்கு இருந்த 60 ஆண்டுகால தடையை நீக்கும் வகையில், ‘சாந்தி’ மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திருத்தம், தனியாா் நிறுவனங்கள் நேரடியாக அணுமின் நிலையங்களை அமைக்கவும், சிறிய அளவிலான அணு உலை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் வழிவகை செய்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments