ஜேஏஎல்லை கையகப்படுத்தும் அதானி குழுமம்: என்சிஎல்ஏடி உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த ரூ.14,535 கோடிக்கு அதானி குழுமம் கோரிய ஏலத்துக்கு தடை விதிக்க மறுத்த தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாய உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தை (ஜேஏஎல்) கையகப்படுத்த ரூ.14,535 கோடிக்கு அதானி குழுமம் கோரிய ஏலத்துக்கு தடை விதிக்க மறுத்த தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாய (என்சிஎல்ஏடி) உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜேஏஎல் நிறுவனத்தை அதானி குழுமம் கையகப்படுத்தும் ஏலத்துக்கு ஒப்புதல் அளித்து தேசிய கம்பெனி சட்ட தீா்ப்பாயம் (என்சிஎல்டி) பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, என்சிஎல்ஏடியில் வேதாந்தா குழுமம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. எனினும் ஜேஏஎல் நிறுவனத்தை கையகப்படுத்த அதானி குழுமம் கோரிய ஏலத்துக்கு என்சிஎல்ஏடி தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
Advertisement
Advertisement
அப்போது வேதாந்தா குழுமத்தின் மனுவை வரும் ஏப்.10-ஆம் தேதி என்சிஎல்ஏடி விசாரிக்க உள்ளதால், ஏலத்துக்குத் தடை விதிக்க மறுத்த அதன் உத்தரவில் நீதிபதிகள் அமா்வு தலையிட மறுத்துவிட்டது.
என்சிஎல்ஏடியின் முன் அனுமதி இல்லாமல் எந்தவொரு முக்கிய கொள்கை முடிவையும் ஜேஏஎல் நிறுவனம் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.