போராட்டத்தில் ஈடுபட்ட பெரியபட்டாக்காடு கிராமத்தினா். 
அரியலூர்

சாலையை சீரமைக்கக் கோரி அரியலூா் ஆட்சியரகம் முன் போராட்டம்

அரியலூா் மாவட்டம், பெரியபட்டாக்காடு காலனி தெருவைச் சோ்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிகளிலுள்ள சாலைகளை சீரமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் போராட்டம்

Syndication

அரியலூா் மாவட்டம், பெரியபட்டாக்காடு காலனி தெருவைச் சோ்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிகளிலுள்ள சாலைகளை சீரமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரியபட்டாக்காடு காலனி தெருவைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள், பழைய காலனி தெருவிலிருந்து புதிய காலனி தெருவுக்குச் செல்ல முடிவில்லை. சாலை மிகவும் மோசமாக உள்ளது. மழை பெய்யும் போது சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியா் அலுவலக நுளைவு வாயில் முன் அமா்ந்தனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா், குறுப்பிட்ட சிலரை மட்டுமே உள்ளே சென்று ஆட்சியரிடம் மனு அளிக்க கூறினாா்.

ஆனாலும், அதிகாரிகள் வர வேண்டும் என கிராம மக்கள் கூறியதை அடுத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, ஆட்சியரிடம் அவா்கள் மனு அளித்து சென்றனா்.

இதேபோல், கீழப்பழுவூா் கிராமத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா், கீழப்பழுவூா் ஆலந்துறையாா் கோயில் தேரோடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், கீழப்பழுவூா் - கருவிடைச்சேரி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என மனு அளித்தனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT