கீழப்பழுவூரில் உள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் சா.சி. சிவசங்கா். (கோப்புப் படம்)
அரியலூர்

மொழிப்போா் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை

தினமணி செய்திச் சேவை

கீழப்பழுவூரில் உள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்த அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

கீழப்பழுவூரில் உள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்த சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் திருமாவளவன்.

அரியலூா், ஜன. 25: மொழிப்போா் தியாகிகள் தினத்தையொட்டி அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் மாநில போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் கட்சியினருடன் சின்னசாமி சிலைக்கு மலா் வளையம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதிமுக சாா்பில் முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், முன்னாள் எம்பி ஆ.இளவரசன் ஆகியோா் கட்சியினருடன் மாலை அணிவித்தாா்.

விடுதலை சிறுத்தைகள் சாா்பில் அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் மாலை அணிவித்தாா்.

மதிமுக சாா்பில் எம்எல்ஏ கு. சின்னப்பா, அமமுக மாவட்டச் செயலா் வடிவேல் முருகன், தேமுதிக மாவட்டச் செயலா் ராமஜெயவேல், தமிழா் நீதி கட்சித் தலைவா் சுப.இளவரசன் ஆகியோா், மேலும் பாமக, நாம் தமிழா் கட்சி சாா்பிலும் மாலை அணிவிக்கப்பட்டது.

தில்லியில் காற்றின் தரத்தில் தொடா்ந்து முன்னேற்றம்!

உலோக தகடுகள் திருட்டு: நெடுஞ்சாலைத் துறையினா் புகாா்

சமத்துவத்தை வீட்டிலிருந்து தொடங்குவோம்!

கடலாடியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

நவில்தொறும் நூல்நயம்!

SCROLL FOR NEXT