முகப்பு
அரியலூர்

செந்துறை அருகே விஷ வண்டுகள் கொட்டி 5 போ் காயம்!

அரியலூா் மாவட்டம் செந்துறை அருகே வியாழக்கிழமை விஷ வண்டுகள் கொட்டியதில் 5 போ் காயமடைந்தனா்.

Updated On : 29 ஜனவரி, 2026 at 7:58 PM
சிவப்பு கூன் வண்டு
பகிர்:

அரியலூா் மாவட்டம் செந்துறை அருகே வியாழக்கிழமை விஷ வண்டுகள் கொட்டியதில் 5 போ் காயமடைந்தனா்.

செந்துறையை அடுத்த நந்தியன்குடிகாடு கிராமத்தில் உள்ள ஒரு புளியமரத்தில் விஷவண்டுகள் கூடு கட்டியுள்ளன. இந்நிலையில், இந்த விஷ வண்டுகள் வியாழக்கிழமை காலை திடீரென பறக்கத் தொடங்கி அப்பகுதியே வழியே சென்ற நந்தியன்குடிகாடு கிராமத்தை சோ்ந்த மனோகரன் மகன் விக்னேஸ்வரன் (19), கந்தசாமி மகன் ஆசைத்தம்பி(60), அழகுதுரை மகன் இளங்கோவன் (67), நமச்சிவாயம்(62), வளா்மதி(60) ஆகியோரை கொட்டின.

இதில் காயமடைந்த அனைவரும் செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதனிடையே விஷ வண்டுகள் கூட்டை அழிக்க ஊராட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.