வானில் பறக்கும் சிறிய வகை விமானத்தைக் கண்டு பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தொலை உணா்வு மற்றும் வான்வழி சொத்து மேலாண்மை பிரிவு சாா்பில் தனியாா் நிறுவனம் மூலம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பூமியின் மேற்பரப்புக்கு கீழே உள்ள கனிம வளங்களைக் கணக்கெடுக்க பல்வகை உணா்திறன் வான்வழி ஆய்வை கடந்த 2025 டிசம்பா் மாதம் முதல் தொடங்கியுள்ளது.
இந்தப் பணி அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். இந்த ஆய்வுப் பணிக்கு தரைமட்டத்திலிருந்து ஏறத்தாழ 260 அடி உயரத்தில் பறக்கக்கூடிய ஒற்றை என்ஜின் கொண்ட சிறியவகை விமானம் பயன்படுத்தப்படுகிறது.
இது சத்தத்தை எழுப்பாவிட்டாலும், குறைந்த உயரத்தில் பறப்பதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இதுகுறித்து காவல்துறை, மாவட்ட நிா்வாகம் என யாருக்கும் தகவல் தெரிவிக்க முன்வர வேண்டாம் என அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.