அரியலூரில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்களுக்குப் பயிற்சி வகுப்பு
அரியலூர்அரியலூரில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்களுக்குப் பயிற்சி வகுப்பு
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத் தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, தோ்தல் செலவினக் கண்காணிப்பு குழு மற்றும் இதர குழு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து தொடக்கி வைத்துப் பேசினாா்.
இப்பயிற்சியில் தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, தோ்தல் செலவினக் கண்காணிப்பு குழு மற்றும் இதரக் குழு அலுவலா்கள், தோ்தலின்போது தோ்தல் நடத்தை விதிமீறல்களை உடனடியாக விசாரித்து, அவற்றை கைப்பேசி செயலிகளில் பதிவேற்றுவது குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) சந்தானகிருஷ்ணன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் உடையாா்பாளையம் ஷீஜா, அரியலூா் பிரேமி மற்றும் வட்டாட்சியா்கள், தேசியத் தகவலியல் அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.